இந்த 3 மாநிலங்களில் இருந்து கோழிகள், முட்டை வாங்கக்கூடாது - அரசு தடை!
3 மாநிலங்களில் இருந்து கோழிகள், முட்டை வாங்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.
பறவை காய்ச்சல்
ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான கோழிகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன.
மேலும், உயிழப்பின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர்ந்து இதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறது.
அரசு எச்சரிக்கை
இந்நிலையில், ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கோழி, முட்டை வாங்க கார்நாடகா அரசு தற்காலிக தடை விதித்துள்ளது.
இறைச்சி, முட்டை டீலர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.