குழந்தைகளுக்கு அதிகரிக்கும் சுவாச பாதிப்பு.. எச்சரிக்கும் சுகாதார துறை!

Karnataka China India
By Vinothini Nov 29, 2023 10:18 AM GMT
Report

தொடர்ந்து சுவாச பாதிப்பு குழந்தைகளுக்கு அதிகரித்து வருவதால் சுகாதார துறை எச்சரித்துள்ளது.

சுவாச பாதிப்பு

சீனாவில் சில வாரங்களாக குழந்தைகளுக்கு சுவாச பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த ஞாயிற்று கிழமை, அது ஆபத்து ஏற்படும் வகையில் இல்லை என்றும் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தது.

china respiratory disease outbreak

இந்த சூழலில், கர்நாடக அரசு பருவகால புளூ வைரசின் பாதிப்புகளை முன்னிட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

சுரங்க விபத்து: முதல் 24 மணி நேரம்.. அதன்பின் நடந்தது.. - மீட்கப்பட்ட தொழிலாளர் பேட்டி!

சுரங்க விபத்து: முதல் 24 மணி நேரம்.. அதன்பின் நடந்தது.. - மீட்கப்பட்ட தொழிலாளர் பேட்டி!

எச்சரிக்கை

இந்நிலையில், அந்த அறிவிப்பில், "அது ஒரு தொற்று நோய் என்றும் 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்க கூடும் என்றும் தெரிவித்தது. இதனால், குறைவான இறப்பு விகிதங்களே உள்ளன என அறியப்படுகிறது. எனினும், குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டோருக்கும், ஸ்டீராய்டு உள்ளிட்ட நீண்டகால மருத்துவ சிகிச்சை எடுத்து கொள்வோருக்கும் அதிக பாதிப்புகள் ஏற்பட கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

wear mask

மேலும், "இதனால் காய்ச்சல், ஜுரம், சுவையுணர்வு இழப்பு, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும். அதிக பாதிப்பு நிலையில் உள்ளவர்களுக்கு 3 வாரங்கள் வரை வறட்டு இருமலும் காணப்படும். மக்கள் இருமும்போதும், தும்மும்போதும் வாய் மற்றும் மூக்கை பொத்தி கொள்ள வேண்டும்.

அடிக்கடி கை கழுவ வேண்டும். தேவையின்றி முகத்தின் மீது தொட வேண்டாம். நெருக்கடியான பகுதிகளில் முக கவசங்களை பயன்படுத்த வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.