நடுக்கடலில் கர்ணன் பட கட்அவுட் - வித்தியாசமாக கொண்டாடிய தனுஷ் ரசிகர்கள்!

Dhanush flim karnan cutout
By Jon Apr 08, 2021 04:53 PM GMT
Report

புதுச்சேரியில் கர்ணன் திரைப்படம் நாளை வெளியாவதை முன்னிட்டு நடுக்கடலில் தனுஷ் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் கட் அவுட் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள கர்ணன் படம். இந்த படம் நாளை வெளியாக உள்ளது.

இதனையடுத்து, புதுச்சேரியில் தனுஷ் ரசிகர்கள் வித்தியாசமுறையில் வரவேற்பு கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். கொஞ்சம் வித்தியாசமான முறையில் தனுஷ் ரசிகர்கள் நடுக்கடலுக்கு படகில் சென்று கர்ணன் படத்திற்கான கட்அவுட் வைத்து சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

தனுஷின் ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘கண்டா வரச்சொல்லுங்க’ பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

நடுக்கடலில் கர்ணன் பட கட்அவுட் - வித்தியாசமாக கொண்டாடிய தனுஷ் ரசிகர்கள்! | Karnan Movie Cutout Sea Dhanush Fans Celebrating

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. முன்னதாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் முதல் படமாக வெளிவந்த ‘பரியேறும் பெருமாள்’ விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி வாகை சூடியது.

இதனைத் தொடர்ந்து மாரி இயக்கத்தில் இரண்டாவது படமாக வெளிவர இருக்கும் கர்ணன் படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று தமிழக அரசு கொரோனா பரவல் காரணமாக பொதுமக்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளதையடுத்து, தியேட்டர்களிலும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.