நான் என்ன இயந்திரமா..? கர்ப்பம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த கரினா கபூர்
தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை கரீனா கபூர்.
கரீனா கபூர்
பாலிவுட்டின் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை கரீனா கபூர், பெர்சனல் லைஃப் - புரொபஷனல் இரண்டையும் பேலன்ஸ் செய்து வருகிறார். இரண்டு குழந்தைகளின் அம்மாவாக இருக்கும் இவர்,
சமீபத்தில் தனது மூன்றாவது குழந்தையை எதிர்பார்ப்பதாக இணையத்தில் வதந்திகள் பரவின. இதற்கிடையே சமீபத்தில் கரீனா கபூர் கலந்துக் கொண்ட நேர்காணலில், ஒரு நடிகை உடல் எடை அதிகரித்தால், அவர் கர்ப்பமாக இருப்பதாகக் கருதும் மக்களின் அணுகுமுறை குறித்து கேட்கப்பட்டது.
பரவிய வதந்தி
அதற்கு பதிலளித்த அவர், நீங்கள் எதை குறிப்பிடுகிறீர்கள், அவள் கர்ப்பமாக இருக்கிறாளா? அவளுக்கு இன்னொரு குழந்தையா? நான் என்ன இயந்திரமா? அந்த தேர்வை என்னிடம் விட்டு விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
கரீனா கபூர் இங்கிலாந்து மற்றும் இத்தாலி முழுவதும் 40 நாட்கள் விடுமுறையைக் கழித்தார். முழு பயணத்தையும் இன்ஸ்டகிராமில் படங்களாக வெளியிட்டார். அப்போது சைஃப் அலி கான் மற்றும் லண்டனில் உள்ள அவரது நண்பருடன் கருப்பு டேங்க் டாப் அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.
கர்ப்பமாக இல்லை
அந்தப் படத்தைப் பார்த்து, கரீனா கர்ப்பமாக இருப்பதாக நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டனர். மேலும் இது குறித்து இன்ஸ்டகிராம் ஸ்டோரில் பதிலளித்திருந்த கரீனா, அமைதியாக இருங்கள்...
நான் கர்ப்பமாக இல்லை. நம் நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்கனவே அதிகமாக பங்களித்திருப்பதாக சைஃப் கூறுகிறார் என்று தெரிவித்திருந்தார்.