சீதையாக நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகை

 இந்தியில் உருவாகும் ராமாயண கதையில் சீதாவாக நடிக்க நடிகை கரீனா கபூர் ரூ. 12 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.500 கோடி செலவில் தெலுங்கில் ராமாயண கதை ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் படமாகிறது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர்.

இதனையடுத்து இந்தியிலும் ராமாயண கதை ‘சீதா’ என்ற பெயரில் படமாகிறது. சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் சீதையாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரீனா சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்திற்காகசுமார் ஒரு வருடம் கால்ஷீட் தர வேண்டி இருப்பதால் அதிக சம்பளம் கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்