மாணவிகளின் தாயார்தான் டார்க்கெட் - சிக்கிய மன்மத கராத்தே மாஸ்டர்!
பெண்ணை உறவுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து தாக்கிய கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாயார்தான் டார்க்கெட்
திருநெல்வேலி, சுத்தமல்லி அருகே இஸ்திமாநகரை சேர்ந்தவர் மஜீத். டீக்கடை ஊழியர். இவரது மனைவி அலி பாத்திமா (33). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அலி பாத்திமா தனது இரண்டு குழந்தைகளையும் சுத்தமல்லி பொன்விழா நகரில் அப்துல் வஹாப் (37), நடத்தி வரும் கராத்தே மையத்தில் பயிற்சிக்கு அனுப்பி வந்தார். இதில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கராத்தே மாஸ்டர் கைது
இதனை மஜீத் கண்டித்தார். எனவே அலி பாத்திமா, அப்துல் வஹாப் உடன் பேசுவதை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அப்துல் சம்பவத்தன்று அலி பாத்திமாவின் வீட்டுக்குள் சென்று, அவதுாறு வார்த்தைகள் பேசி, தான் கூப்பிட்டால் வரவேண்டும் என தாக்கியுள்ளார்.
தொடர்ந்து பாத்திமா இதுகுறித்து போலீஸில் புகாரளித்துள்ளார். அதன்படி, அப்துல் வஹாப் மீது பெண் வன்கொடுமை உட்பட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதுவரை 8 பெண்களை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.