அமெரிக்க இளைஞரை கரம்பிடித்த காரைக்குடி பெண் - குவிந்த வாழ்த்துக்கள்!

United States of America Marriage Kumbakonam
By Sumathi Jan 23, 2024 06:05 AM GMT
Report

காரைக்குடியை சேர்ந்த பெண்ணிற்கும் நியூயார்க் சேர்ந்த நபருக்கும் தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் நடைபெற்றது.

கடல் கடந்த காதல்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி முத்துப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர் அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உள்ள பிரபல சாப்ட் வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார்.

priya - sam

பிரியாவிற்கும் நியூயார்க் பகுதியை சேர்ந்த சாம் என்பவருக்கும் இணையதளம் மூலம் பழக்கமாகி உள்ளது. தொடர்ந்து, சாம் காரைக்குடியை பற்றியும் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரங்கள், திருமண சடங்குகள், திருவிழாக்கள் போன்றவற்றை பிரியாவிடம் கேட்டறிந்துள்ளார்.

கடல் கடந்த காதல்; சீன பெண்ணை சோஷியல் மீடியாவில் காதலித்து கரம்பிடித்த கடலூர் இளைஞர்!

கடல் கடந்த காதல்; சீன பெண்ணை சோஷியல் மீடியாவில் காதலித்து கரம்பிடித்த கடலூர் இளைஞர்!

குவியும் வாழ்த்துக்கள்

இதனால் தமிழ் கலாச்சாரம் மீதும் பிரியாவின் மீதும் சாமிற்கு காதல் ஏற்பட்டது. இருவருக்கும் பிடித்து போகவே இருவரின் வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தனர். மேலும், சாம் செட்டிநாட்டு முறைப்படி திருமணம் செய்துகொள்ள விரும்பியதால் காரைக்குடியில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அமெரிக்க இளைஞரை கரம்பிடித்த காரைக்குடி பெண் - குவிந்த வாழ்த்துக்கள்! | Karaikudi Girl Who Married An American Boy

அதன்பின், தமிழ் மரபுபடியும் செட்டிநாடு நகரத்தார் முறைப்படியும் சாமும் பிரியாவும் திருமணம் செய்துகொண்டனர். இது மட்டுமில்லாமல் மணமகனின் பெற்றோரும் உறவினர்களும் தமிழ் மரபுப்படி உடையணிந்து இருந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடதக்கது.