90’s கிட்ஸ் பெட்டிகடை ஸ்பெஷல்..எச்சில் ஊறும் கராச்சி அல்வா - ருசிகர தகவல்!
பாகிஸ்தானின் பிரபலமான அல்வா 90ஸ் கிட்ஸ்-ன் பெட்டி கடை ஸ்பெஷல் ஆனதே அதன் அசரடிக்கும் ருசியால்தான்..
கராச்சி அல்வா
திருநெல்வேலி அல்வா, மணப்பாறை முறுக்கு, ஆம்பூர் பிரியாணி, கோவில்பட்டி கடலைமிட்டாய் என ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு ஸ்பெஷல் உண்டு. அந்த வரிசையில் கராச்சு அல்வா முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இந்த கராச்சி அல்வா ஒவ்வொரு வீட்டிலும் தயார் செய்யப்படும் இனிப்பாகும். பிரிவினையின்போதும், அதற்குப் பிறகும் இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்களோடு இந்த கராச்சி அல்வா ரெசிபியும் சேர்ந்தே வந்து விட்டது.
செய்முறை
இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மர் பகுதியில் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு பண்டிகை காலத்தின்போதும் கராச்சி அல்வா செய்வதில் தவறுவதேயில்லை என்றே கூறலாம். இதன் சுவை நாக்கில் தாண்டவமாடும். இந்த கராச்சி அல்வாவை தயாரிக்க கோதுமையை 8 நாட்களுக்கு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் தண்ணீரை மாற்ற வேண்டும். அதற்கு பிறகு அதை காயவைத்து மாவாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அல்வா சமையலுக்கு மட்டுமே 4 முதல் 5 மணி நேரம் ஆகிறது. அரைத்த கோதுமை மாவில் இருந்து பால் எடுத்து, அதில் சர்க்கரை, நெய், ஏலக்காய், உலர் பழங்கள் உள்ளிட்டவற்றை சேர்த்து அல்வா தயாராகிறது.
விற்பனை
பிஸ்தா கொண்டு செய்யப்பட்ட அல்வா கிலோ ரூ.900 ஆகும். இதர உலர் பழங்களைக் கொண்டு தயாராகும் அல்வா கிலோ ரூ.650 ஆகும். அதேபோன்று பழங்கள் குறைவாகப் பயன்படுத்தப்படும் அல்வா ரூ.450 ஆகும்.
பண்டிகை காலங்களில் மட்டும் 150 கிலோ அல்வா விற்பனையாகிறதாம். பச்சை நிறம் மற்றும் காவி நிறத்தில் அல்வா தயார் செய்யப்படுகிறது.
ராஜஸ்தானில் தயாராகும் கராச்சி அல்வா சென்னை, மும்பை, அஹமதாபாத், சூரத் போன்ற நகரங்களுக்கும் ஏற்றுமதி ஆகிறது. மேலும், இந்த அல்வா 6 மாதங்கள் வரையில் கெட்டுப் போகாமல் இருக்கிறது.