உனக்கு 26 எனக்கு 75 - வைரலாகும் திருமண வீடியோ.. குமுறும் 90ஸ் கிட்ஸ்!

Viral Video Marriage Puducherry
By Sumathi Aug 31, 2022 07:33 AM GMT
Report

இளம்பெண் ஒருவர் முதியவரை திருமணம் செய்து கொண்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

திருமணம்

புதுச்சேரி மாநிலம், மணக்குள விநாயகர் ஆலயத்தில் முதியவர் ஒருவரை இளம்பெண் திருமணம் செய்துள்ளார். இதில் அந்த பெண்ணுக்கு வயது 26, முதியவருக்கு வயது 75 என்றும் கூறப்படுகிறது.

உனக்கு 26 எனக்கு 75 - வைரலாகும் திருமண வீடியோ.. குமுறும் 90ஸ் கிட்ஸ்! | 26 Year Old Woman Married A 75 Year Old Man

மேலும், இந்த திருமணத்தில் இருவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர். இந்த திருமண வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோ வைரல்

இதனைப் பார்த்த 90ஸ் கிட்ஸ் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில், இதேப்போல் பாகிஸ்தானில் 18 வயது முஸ்கான் என்ற இளம்பெண் 55 வயதான பரூக் அகமது முஸ்கான் என்பவரை இணையத்தில் பழக்கமாகி திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.  

தற்போதெல்லாம் இதுபோன்ற திருமண வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருவதே வாடிக்கையாக உள்ளது.