பொண்ணு கேட்டு போன காதலன்; ஆனால்.. காதலி வீட்டில் - உடனே பெட்ரோலை ஊற்றிய இளைஞர்!
காதலி வீட்டு முன் தீக்குளித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் விவகாரம்
கன்னியாகுமரி, புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் மோகனன். கேரளாவில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 3 மகன்கள்.
இதில் மூத்த மகன் முகேஷ்(25) சென்னையில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நித்திரவிளை பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இளைஞர் தற்கொலை
தொடர்ந்து, காதலியின் வீட்டுக்கு சென்று அவருடைய தந்தையிடம் முகேஷ் முறைப்படி பெண் கேட்டுள்ளார். ஆனால் அவர் அவமதித்து அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த இளைஞர் காதலி வீட்டு முன்பு தீக்குளிக்க முடிவு செய்து, ஒரு கேனில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு காதலி வசிக்கும் நித்திரவிளை பகுதிக்கு போனார்.
அங்கு காதலி வீட்டு முன்பு நின்றபடி காதலியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென பெட்ரோலை தன்னுடைய உடலில் ஊற்றிக்கொண்டு திடீரென தீயை பற்ற வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனே அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.