முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு; அலைபேசியில் மிரட்டல் - பெரும் பரபரப்பு!
முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று அதிகாலை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அலைபேசி மூலம் அழைப்பு வந்தது.
அதில் பேசிய மர்ம நபர் முதல்வரின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டை அங்குலம் அங்குலமாக சோதனை செய்தனர்.
வெடிகுண்டு மிரட்டல்
எங்கும் எவ்விதமான வெடி பொருட்களும் கண்டறியப்படவில்லை. அதனையடுத்து மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. தொடர்ந்து, போன் செய்தவரின் எண்ணை வைத்து
அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என தெரியவந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார். மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.