முதல் மனைவியை டார்ச்சர் செய்த நிக்கோலாய்? வரலட்சுமிக்கு பிரபலம் எச்சரிக்கை!

Varalaxmi Sarathkumar Tamil Cinema Marriage
By Sumathi Jul 04, 2024 09:30 AM GMT
Report

நிக்கோலாய் சச்தேவ் குறித்து திரை ஆர்வலர் காந்தராஜ் அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துள்ளார்.

வரலட்சுமி திருமணம்

நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயா தேவிக்கு பிறந்தவர்தான் நடிகை வரலட்சுமி(39). இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012-ம் ஆண்டு ‘போடா போடி’படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

varalakshmi - nicholai

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை வரலட்சுமி மற்றும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலய் சச்தேவ் என்பவருக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

வரலட்சுமியுடன் திருமணம்; நிக்கோலாயின் பிளானே இதுதான் - போட்டுடைத்த பிரபலம்!

வரலட்சுமியுடன் திருமணம்; நிக்கோலாயின் பிளானே இதுதான் - போட்டுடைத்த பிரபலம்!

பிரபலம் எச்சரிக்கை

தற்போது அவர்களது திருமணம் தாய்லாந்தில் நடக்கிறது. இந்தத் திருமணத்தில் இரு குடும்பத்தினரின் உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொள்கிறார்கள். தொடர்ந்து, திருமண வரவேற்பு சென்னையில் நடக்கவுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மருத்துவரும், திரை ஆர்வலருமான காந்தராஜ், நிக்கோலாய் ஆபத்தானவராகக்கூட இருக்கலாம்.

முதல் மனைவியை டார்ச்சர் செய்த நிக்கோலாய்? வரலட்சுமிக்கு பிரபலம் எச்சரிக்கை! | Kantharaj Warns To Varalaxmi For Marry Nicholai

முதல் மனைவிக்கு துரோகம் செய்து டார்ச்சர் கொடுத்திருக்கலாம். அதோடு பல பெண்களுடன் தொடர்பிலும் இருக்கலாம். இந்தத் திருமணத்துக்கு சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவி வரவில்லை. இது ஒரு லேட் மேரேஜ் என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

இதன் காரணமாக குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படும்.இந்தியாவில் இவர்களது திருமணம் நடந்திருந்தால் சட்ட சிக்கல் ஏற்படலாம் என்பதை அடுத்து தாய்லாந்தில் திருமணத்தை நடத்தியிருக்கலாம் இந்தத் திருமணம் ஒரு சமூக பாதுகாப்புக்காகத்தான் நடந்திருக்கிறது. இதில் எந்தக் காதலும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.