காந்தாரா பட நடிகர் திடீர் மரணம் - நடனமாடியதில் நேர்ந்த துயரம்!
பிரபல கன்னட நடிகர் மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ராகேஷ் மறைவு
கன்னட திரையுலகின் பிரபல நடிகர் ராகேஷ் புஜாரி(33). காந்தாரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். காந்தாரா படத்தின் 2ம் பாகத்திலும் நடித்து வந்துள்ளார்.
இந்நிலையில், உடுப்பியில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அப்போது விழாவில் தமது நண்பர்களுடன் அவர் மேடையில் நடனமாடிக்கொண்டிருந்தார்.
திரை பிரபலங்கள் இரங்கல்
அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக நெஞ்சை பிடித்தபடியே சரிந்து விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் பரிசோதித்து தெரிவித்துள்ளனர், தற்போது இவரது மறைவுக்கு கன்னட சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.