விஜய் உள்ளிட்டோருடன் நடித்த நடிகை பெருமாயி காலமானார் - சோகத்தில் திரையுலகம்

Tamil Cinema Death Tamil Actress
By Karthikraja May 04, 2025 10:11 AM GMT
Report

 நடிகை பெருமாயி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அன்னம்பாரிபட்டியைச் சேர்ந்தவர் 73 வயதான பெருமாயி. 

நடிகை பெருமாயி

இயக்குநர் பாரதிராஜா இயக்கிய ‘தெற்கத்தி பொண்ணு’ சீரியல் மூலம் பிரபலமாகி, பாரதிராஜாவின் பல்வேறு படங்களிலும் நடித்திருக்கிறார். 

மேலும், விஜய் நடிப்பில் வெளியான 'வில்லு', சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மனம் கொத்தி பறவை', என 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

மாரடைப்பால் உயிரிழப்பு

கடைசியாக நடிகர் பசுபதியின் தண்டட்டி படத்தில் நடித்திருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக சமீபகாலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். 

நடிகை பெருமாயி

இந்நிலையில், மாரடைப்பு காரணமாக இன்று தனது வீட்டில் உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ள சூழலில், பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திரையுலகை சேர்ந்தவர்கள் அவரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.