அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி; 2வது திருமணத்தால் பகீர் - கதறிய கணவன்!

Marriage Kanyakumari
By Sumathi Oct 21, 2023 09:47 AM GMT
Report

மனைவி விவாகரத்து செய்யாமல் 2வது திருமணம் செய்துகொண்டதால் கணவர் புகாரளித்துள்ளார்.

2வது திருமணம்

கன்னியாகுமரியைச் சேர்ந்த நபர் ஒருவர் அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை 2016ல் திருமணம் செய்துள்ளார். அந்த நபர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

அம்மா வீட்டிற்கு சென்ற மனைவி; 2வது திருமணத்தால் பகீர் - கதறிய கணவன்! | Kanniyakumari Wife 2Nd Marriage Husband Complaint

அதன் பின் சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மனைவி தனது அம்மா வீட்டிற்குச் சென்றுள்ளார். கணவரும் வெளிநாட்டிற்கு வேலைக்கு திரும்பியுள்ளார்.

மனம் நொந்த கணவன்

இதற்கிடையில் 31 வயதாகும் மனைவி 2வது திருமணம் செய்ய முடிவெடுத்து, மாப்பிள்ளை பார்த்து கல்யாண ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளது. இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த கணவர் போலீஸில் புகாரளித்துள்ளார்.

2nd marriage

விவாகரத்து செய்யாமலேயே மனைவி 2வது திருமணம் செய்யவிருப்பதாகவும், அதனை தடுத்து நிறுத்துமாறும் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்குள் மனைவி திருமணத்தையே முடித்துவிட்டார். காவல் நிலையத்திலும் மகளிர் போலீஸில் புகாரளிக்குமாறு கூறி கணவரை அனுப்பியுள்ளனர்.

லெஸ்பியன் மனைவியின் காதலியை 2வது திருமணம் செய்துக்கொண்ட கணவன் - ஷாக் சம்பவம்!

லெஸ்பியன் மனைவியின் காதலியை 2வது திருமணம் செய்துக்கொண்ட கணவன் - ஷாக் சம்பவம்!

மேலும், இச்சம்பவத்திற்கிடையில் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார். ஆனால் மனைவி அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.