உன்கிட்ட மட்டும்தான் பேசுவேன்; பாதிரியார் ஆடியோ ரிலீஸ் - நடவடிக்கை இல்லை ஏன்?
வீடியோ வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் பாதிரியாரின் ஆடியோ வெளியாகியுள்ளது.
பாதிரியார் லீலை
கன்னியாகுமரி, தக்கலை அருகே உள்ள சர்ச்சில் பாதிரியார் இருப்பவர் பெனடிக்ஆன்றோ (29). தொடர்ந்து கல்லுாரி மாணவி ஒருவருடன் இவர் நெருக்கமாகவும், ஆடையின்றியும் இருக்கும், வீடியோ வெளியானது. அதில் அந்த மாணவி தற்கொலை முடிவில் இருப்பதாக கூறி, புகார் அளிக்கப்பட்டது.
ஆனால், இந்த வழக்கு விசாரணையிலேயே உள்ளது. இதனால் தொடர்ந்து பெண்ணை நிர்வாண படம் எடுத்த பாதிரியார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை எழுந்து வருகிறது.
ஆடியோ ரிலீஸ்
இந்நிலையில், பெங்களூருவில் நர்சிங் படிக்கும் குமரி மாவட்ட மாணவி ஒருவரிடம், பாதிரியார் ஜொள்ளு விட்டு பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், 'உன் நினைப்பாவே இருக்கு... உன்னையே நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தொடங்கி, துாக்கம் வர மாட்டேங்குது என பேசிய பாதிரியாரிடம்,
மறுமுனையில் இருந்து, 'எங்கிட்ட மட்டும் தான் இப்படி பேசுவீங்களா?' என்று கேட்டதும்... பிராமிஸ், உங்கிட்ட மட்டும் தான் இப்படி பேசுறேண்டி... என்னை நம்பு' என, சத்தியம் செய்கிறார். தொடர்ந்து, பாதிரியார் தலைமறைவாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
புகார் கொடுத்துள்ள பெண்களின் குடும்பத்தை சமரசம் செய்து, வழக்கு பதிவு செய்யாமல் இருக்க முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.