வாயில் எதையாவது வைச்சிட்டு - இனிமேல் இப்படி பேசாதீங்க!! கண்ணதாசன் மகன்
எச்சரிக்கை வைரமுத்து மீது கவிஞர் கண்ணதாசனின் மகன் கடும் கண்டனம் தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அண்ணாதுரை சாடல்
அந்த வீடியோவில் அண்ணாதுரை பேசும் போது, "ஒரு படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நீங்கள் (வைரமுத்து) பேசிய வீடியோ ஒன்றைப் பார்த்தேன் என குறிப்பிட்டு, அதில் மதுவின் கொடுமையைப் பற்றி ஒரு பாடல் ஒன்றை நீங்கள் எழுதியிருந்தீர்கள் என்றும் அதனை சிறப்பிக்கும் வகையில் சம்பந்தமே இல்லாமல் எதற்காக நீங்கள் கண்ணதாசனை இழுத்தீர்கள் என்று வினவினார்.
தொடர்ந்து பேசிய அவர், ஒரு சொட்டு மது கூட என் வயிற்றுக்குள் செல்லவில்லை என்று வைரமுத்து கூறியதை குறிப்பிட்டு, மதுவுக்கு எதிராக என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஜி.ஆரின் தவிர வேறு படங்களில் பாடல்கள் வரவில்லை என்றும் சொன்னதை கூறி, ஆனால், 1973-ல் ‘பாசதீபம்’ படத்தில் மதுவுக்கு எதிராக கண்ணதாசன் பாடல் எழுதியிருப்பார் என்பதை சுட்டிக்காட்டினார்.
இனிமேல்
நீங்கள் மட்டும்தான் மதுவுக்கு எதிராக பாடல் எழுதி இருக்கிறீர்கள் என நினைக்கிறீர்கள், அது இல்லை என்பதற்காகதான் இதைச் சொல்கிறேன் என்றார்.
மேலும், இனிமேல் கண்ணதாசன் குறித்து புகழ்ந்தோ, இகழ்ந்தோ பேசவேண்டாம் என உறுதியாக பேசிய அவர், வாய்நிறைய மலத்தை வைத்துக் கொண்டு புகழ்ந்தாலும் இகழ்ந்தாலும் நாற்றம் தான் அடிக்கும்” என்று சாடினார்.
ஏற்கனவே கவிஞர் வைரமுத்துவிற்கு இசையமைப்பாளர் கங்கை அமரன் கடும் எதிர்ப்பை தெரிவித்து எச்சரிக்கை வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.