யாமென்று தற்புகழ வேண்டாம் - சைலெண்டாக சம்பவம் பண்ண ஏ.ஆர்.ரகுமான் !!
இளையராஜா காப்புரிமை விவகாரம் பெரும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
காப்புரிமை
இளையராஜா தான் இசைமையத்த பாடல்களை ஒப்பந்தம் முடிந்தும் பயன்படுத்துவதாக குறிப்பிட்டு, அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதனை தொடர்ந்து இந்த விவகாரம் நீதிமன்றத்தை தாண்டி, பொதுவெளியில் பேசும் பொருளாக மாறியுள்ளது. பாடலாசிரியர் வைரமுத்து இது குறித்து பேசிய கருத்துக்கள் ஊடங்களில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதனை தொடர்ந்து இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன், வைரமுத்துவை கடுமையாக சாடி வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
சில கற்றார் பேச்சும் இனிமையே #tamilsrilanka https://t.co/hGjXm33obk via @YouTube
— A.R.Rahman (@arrahman) May 5, 2024
ரகுமான் பதிவு
இந்த சூழலில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் எக்ஸ் தளப்பதிவு மறைமுகமாக இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டுள்ளது என கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றது.
அவரின் பதிவில், சில கற்றார் பேச்சும் இனிமையே என தலைப்பில் பல கற்றோம் யாமென்று தற்புகழ வேண்டாம் என்கிற வரிகள் குமரி முத்து பேசுவது இடம்பெற்றுள்ளது.