”தமிழ்நாடு வாழ்க”.. 5 மொழிகளில் போட்ட போஸ்ட் - கமல்ஹாசன் திட்டவட்டம்
எக்ஸ் தளத்தில் கமல்ஹாசன் மாற்றியுள்ள கவர் போட்டோ கவனம் பெற்றுள்ளது.
கன்னட மொழி சர்ச்சை
"கன்னட மொழியின் தோற்றம் தமிழிலிருந்து உருவானது" என்று கமல்ஹாசன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து கமல்ஹாசன் கன்னட மொழியை அவமதித்துவிட்டதாக கூறி கர்நாடகாவில் போராட்டம் வெடித்துள்ளது.

கன்னட மொழி விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் பேசிய கருத்து சர்ச்சையில், கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்துள்ள நிலையில், பிரச்சனையை தீர்த்துவிட்டு கர்நாடகாவில் தக் லைஃப் வெளியிடப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கமல் செய்த செயல்
அதேசமயம் கர்நாடகாவில் தக் லைஃப் பட வெளியீட்டை ஒத்திவைப்பதாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வழக்கு வரும் ஜூன் 10-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், கமல்ஹாசன் தனது எக்ஸ் (X) சமூக வலைதள கணக்கில் "தமிழ்நாட்டிற்கு ஜெயம் உண்டாகட்டும்" என்று கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் எழுதி கவர் ஃபோட்டோ வைத்துள்ளார். இவரது இந்த பதிவு தற்போது கவனம் ஈர்த்துள்ளது.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan