சிகரெட்..வீடியோ கால் என சிறைக்குள் சொகுசு வாழ்க்கை - நடிகர் தர்ஷன் வீடியோ வைரல்!
நடிகர் தர்ஷன் சிறைகுள் சொகுசு வாழ்க்கை அனுபவிக்கும் சம்பவம் பெரும் சர்ச்சயை கிளப்பியுள்ளது.
நடிகர் தர்ஷன்
கர்நாடகாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் தர்ஷன். இவர் தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி சித்ரவதை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மேலும், இந்த வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்ஸர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் தர்ஷன் சிறை வளாகத்துக்குள் கையில் சிகரெட் மற்றும் காப்பி குவளையுடன் தனது மேலாளர் மற்றும் இரண்டு சிறை நண்பர்களுடன் சொகுசாக சேரில் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சிறைகுள் சொகுசு
அந்த புகைப்படம் தற்போது படு வைரலாகியுள்ளது. மேலும், கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு சிறையில் இதுபோன்ற வசதிகளா? அதிகாரிகள் துணை இன்றி இது நடக்க சாத்தியமில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இதையடுத்து, இந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடகா சிறைத்துறை டிஜிபி மாலினி கிருஷ்ணமூர்த்தி முன்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது நடிகர் தர்ஷன் சிறைக்குள் இருந்தபடி வீடியோ காலில் பெரும் காணொளி வெளியாகி,
மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 நொடிகள் கொண்ட அந்த வீடியோவில் திரைத் துணியால் மறைக்கப்பட்டு சிறை அறையில் மஞ்சள் டீ-சர்ட் அணிந்து அமர்ந்திருக்கும் அவர், நபர் ஒருவருடன் பேசும் காட்சிகள் பதிவாகியுள்ளது.அந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.
This is a highly concerning matter ... Yah Bhai video call kar rahe hain
— Sumit Duhan (@sumitduhan2001) August 25, 2024
Government must think after see this video #Darshan #wigrajadarshan #Dhruvasarja #MartinTheMovie ❤️ pic.twitter.com/EwdIwAV9OW