Tuesday, May 13, 2025

ஜெயில் சாப்பாடு வேண்டாம்; வீட்டு சாப்பாடு தான் வேணும் - நடிகர் தர்ஷன்

Karnataka Crime
By Sumathi 10 months ago
Report

 வீட்டு உணவு வழங்க அனுமதி கேட்டு தர்ஷன் மனு செய்துள்ளார்.

நடிகர் தர்ஷன்

கர்நாடகாவின் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் தர்ஷன். இவர் தனது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைதளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமி என்பவரை கடத்தி சித்ரவதை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தர்ஷன் - பவித்ரா

மேலும், இந்த வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷனின் நண்பர்கள், ரசிகர் மன்ற தலைவர், பவுன்ஸர்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது பெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நடிகைக்காக ரசிகரை கொன்ற நடிகர் தர்ஷன் - நெருங்கிய நண்பர் பகீர் வாக்குமூலம்!

நடிகைக்காக ரசிகரை கொன்ற நடிகர் தர்ஷன் - நெருங்கிய நண்பர் பகீர் வாக்குமூலம்!

மனு தாக்கல்

அவர் சிறைக்கு வந்த போது, அவரது உடல் எடை 107 கிலோ இருந்தது. ஒரே மாதத்தில் 10 கிலோ எடை குறைந்து, 97 கிலோவுக்கு வந்துள்ளார். சிறையில் அளிக்கப்படும் உணவு, மன அழுத்தம் போன்ற காரணங்களால், அவரது எடை குறைந்துவிட்டதாக கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஜெயில் சாப்பாடு வேண்டாம்; வீட்டு சாப்பாடு தான் வேணும் - நடிகர் தர்ஷன் | Actor Darshan Petition Seeking Home Food In Prison

அதில், சிறையில் வழங்கப்படும் உணவு தனக்கு செரிமானம் ஆவதில்லை. தனக்கு வயிற்றுப் போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால் வீட்டில் சமைக்கப்பட்ட உணவை வழங்க சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார். இத்துடன் ஆடைகள், படுக்கை மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றையும் வழங்குமாறு குறிப்பிட்டுள்ளார்.