நாங்க இருக்கோம் கவலை படாதம்மா...பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு போன் செய்த கனிமொழி..!
பேருந்து ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்பட்ட ஷர்மிளாவுக்கு கனிமொழி, வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் செல்போனில் அழைத்து நம்பிக்கை அளித்துள்ளனர்.
பேருந்து ஓட்டுநர் பணியிலிருந்து பணி நீக்கம்
இந்த நிலையில் மாலையில் அவரை பேருந்து ஓட்டுநர் பணியிலிருந்து தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ள சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.
பணி நீக்கம் குறித்து டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் உரிமையாளர், மேலாளர், நடத்துனர் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார்.
இதற்கு டிரான்ஸ்போர்ட் நிறுவனம் அவரது குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், ஷர்மிளாவே தான் பணியில் இருந்து விலகியதாக விளக்கம் அளித்தது.
நான் வேலை வாங்கி தருகிறேன்
ஷர்மிளா பணியில் இருந்து நீக்கப்பட்டத்தை அறிந்த திமுக எம்.பி கனிமொழி பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை செல்போனில் அழைத்து பேசியுள்ளார்.
பேருந்து உரிமையாளரிடம் பேசி வேலை வாங்கி தருவதாக கனிமொழி கூறியதாகவும், அதற்கு ஷர்மிளா மறுத்துவிட்டதாகவும், தான் ஆட்டோ ஓட்டச் செல்லவிருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பணம் அல்லது வங்கிக் கடன் உதவிகள் தேவைப்பட்டால் செய்து தருவதாக என்றும் கனிமொழி ஷர்மிளாவிடம் தெரிவித்துள்ளார்.
தைரியமா இருங்கள்
இதோ போல பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசனும் ஷர்மிளாவை அழைத்துப் பேசியுள்ளார்.
தைரியமா இருங்கள். புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம் என்று ஷர்மிளாவுக்கு வானதி சீனிவாசன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.