பேருந்தில் ஏறி பெண் ஓட்டுநர் சர்மிளாவுக்கு பரிசளித்த கனிமொழி - வேலையில் இருந்து துாக்கிய ஓனர்..!
இன்று காலை பெண் ஓட்டுநர் சர்மிளா இயக்கும் பேருந்தில் ஏறி அவருக்கு வாழ்த்து தெரிவித்து கனிமொழி எம்பி பாராட்டிய நிலையில் அவரை பேருந்து உரிமையாளர் பணியில் இருந்து நீக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சர்மிளாவை பாராட்டிய கனிமொழி
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா(25). இவர் கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுநராவார். இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து சோமனூர் செல்லக்கூடிய தனியார் பேருந்தை இயக்கி வருகிறார். இவரை அரசியல் கட்சி தலைவர்கள், மக்கள், சக ஓட்டுநனர்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதனிடையே இவர் இயக்கி வரும் தனியார் பேருந்தில் திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட மக்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று பயணம் செய்தார்.
கோவை காந்திபுரத்தில் ஷர்மிளா இயக்கும் பேருந்தில் கனிமொழி ஏறினார். பின்னர் பீளமேடு அருகே இறங்கினார். அப்போது பெண் ஓட்டுநரை அவரைப் பாராட்டினார்.
மேலும் அவர், ஷர்மிளாவிடம் பேருந்து இயக்க ஆர்வம் வந்தது எப்படி, எவ்வாறு கற்றுக்கொண்டார் போன்ற விவரங்களைக் கேட்டறிந்து வாட்ச் ஒன்றை பரிசாக அளித்தார்.
பணியில் இருந்து நீக்கம்
மேலும் "பேருந்தை சூப்பராக ஓட்டுறீங்க" எனக்கூறி அவரை உற்சாகப்படுத்தினார். பேருந்தில் கனிமொழி எம்.பி பயணம் செய்வதை அறிந்த திமுகவினர் அப்பேருந்தில் பயணிக்க ஆர்வம் காட்டினர்.
இந்த நிலையில் பேருந்தில் பயணச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் சர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காலையில் கனிமொழி எம்.பி பாராட்டு தெரிவித்து இருந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் சர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.