Thursday, May 1, 2025

தூத்துக்குடியில் Unoppsoed'ஆன கனிமொழி..! நிலக்கரியில் மீண்டும் ஆ.ராசா..?

Andimuthu Raja Smt M. K. Kanimozhi DMK
By Jiyath a year ago
Report

திமுக சார்பில் வரும் மக்களவை தேர்தலில் கனிமொழி தான் போட்டியிடுவார் என்பது உறுதியாகியுள்ளது.

திமுக விருப்ப மனு

மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் போன்றோர் விருப்ப மனுக்களை வழங்கினார்.

kanimozhi-to-contest-from-thoothukudi-again

அப்பணி முடிவடைந்த நிலையில், இன்று நேர்முக தேர்வு நடைபெற்றது. அதில், திமுகவின் சார்பில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட கனிமொழி மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளார். இதன் காரணமாக, அவர் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது.

தமிழ்நாட்டில் மோடி குடியேறினாலும் அது மட்டும் நடக்கவே நடக்காது - கனிமொழி

தமிழ்நாட்டில் மோடி குடியேறினாலும் அது மட்டும் நடக்கவே நடக்காது - கனிமொழி

அதே போல நீலகிரியில் ஆ.ராசா போட்டியிடுவார் என்ற தகவலும் வெளிவருகின்றன. மக்களவை தேர்தலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியில் போட்டியிடப்போகிறார் என்ற கருத்துக்கள் வலுவாக இருந்து வரும் சூழலில், அவருக்கு எதிராக திமுகவின் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா போட்டியிட வாய்ப்பிருப்பதாக  கூறப்பட்டு வருகின்றது