தமிழ்நாட்டில் மோடி குடியேறினாலும் அது மட்டும் நடக்கவே நடக்காது - கனிமொழி
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை மட்டுமே பாஜக செய்து வருவதாக கனிமொழி சாடியுள்ளார்.
ஸ்டாலின் பிறந்தநாள் விழா
தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, பிறந்தநாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்று வருகின்றது.
தமிழக பட்ஜெட் குறித்து மக்களுக்கு எடுத்து கூறவும், மத்திய பாஜகவிற்கு எதிரான பிரச்சாரத்தையும் மேற்கொள்ள இந்த பொதுக்கூட்டங்களை திமுகவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, விளாத்திகுளத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினரும் திமுகவின் துணை பொதுச்செயலாளருமான கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியது வருமாறு, நாடாளுமன்ற தேர்தலின் போது, அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை மட்டுமே பாஜக செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், தமிழகத்தில் தான் பிரதமர் மோடி போட்டியிடுவார் என பல செய்திகள் வெளியான நிலையில், இது குறித்தும் அவர் பேசினார். இது குறித்து அவர் பேசும் போது, தமிழ்நாட்டிலேயே பிரதமர் மோடி குடியேறினாலும் அவரது கட்சியான பாஜகவிற்கு வாக்குகள் விழாது என்று உறுதிபட தெரிவித்தார்.
முன்னதாக அறிவிக்கப்பட்ட பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் பிரதமர் மோடி வாரணாசியில் போட்டியிடுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.