இப்படி சொல்லி தான் பலரும் காணாமல் போனார்கள் - பிரதமருக்கு கனிமொழி
பதிலடி நெல்லையில் பிரதமர் மோடி திமுகவை இனி தேடினால் கூட கிடைக்காது என கூறியதற்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
பிரதமர் விமர்சனம்
நெல்லை பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய பிரதமர் மோடி, அண்ணாமலை வந்துவிட்டார், இனி திமுகவை தேடினால் கூட தமிழ்நாட்டில் அக்கட்சி கிடைக்காது என கடும் விமர்சனந்த்தை முன்வைத்திருந்தார்.
இதற்கு திமுகவினர் பலரும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும் போது, மாநில அரசின் நிதி பங்களிப்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது மத்திய அரசுதான் என விமர்சித்து, அயோத்தி ராமர் கோயிலை கட்டியது அறக்கட்டளை தானே தவிர, அரசு அல்ல என சுட்டிக்காட்டினார்.
தேர்தலுக்காக..
தொடர்ந்து பேசிய கனிமொழி, தூத்துக்குடி விழாவில் எனது பெயரை கூறுவதற்கு கூட பிரதமர் மோடிக்கு மனமில்லை என குறிப்பிட்டு, அவர்களுக்கு தெரிந்த நாகரிகம் அவ்வளவுதான் என்றும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் கால்வாசிதான் மத்திய அரசு நிதி வழங்குகிறது என்று கூறினார்.
தேர்தலுக்காக தமிழகத்திற்கு சில திட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது என்ற கனிமொழி, நல்ல திட்டங்களை திமுக எப்போதும் எதிர்ப்பதில்லை என்று தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகள் எதையும் மத்திய அரசு நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும், இது வரை திமுக அழியும் என்று சொன்ன பலர் காணாமல் போய்விட்டனர் என்று பிரதமரின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார் கனிமொழி.