இந்தி மொழியை திணித்த பிரதமருக்கு திடீரென தமிழ் மீது பற்று - கனிமொழி காட்டம்!

Smt M. K. Kanimozhi Virudhunagar Lok Sabha Election 2024
By Swetha Apr 04, 2024 07:39 AM GMT
Report

நாட்டுப்பற்று என இந்தி மொழியை திணித்த பிரதமர் மோடிக்கு திடீரென தமிழ் மொழி மீது பற்று வந்துவிட்டது என்று கனிமொழி கூறியுள்ளார்.

கனிமொழி கட்டம்

மக்களவை தேர்தல்விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் காட்சிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் வாக்கு சேகரிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தி மொழியை திணித்த பிரதமருக்கு திடீரென தமிழ் மீது பற்று - கனிமொழி காட்டம்! | Kanimozhi Speech In Virudhunagar

அந்த வகையில், திமுக துணைப்பொதுச்செயலாளரான கனிமொழி திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவரும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவதால் அங்கேயும் சென்று தனக்காக வாக்கு சேகரித்து வருகிறர்.

ஓசியில் வாழும் கனிமொழி - பிரதமரை குறித்து பேச தகுதியில்லை - அண்ணாமலை

ஓசியில் வாழும் கனிமொழி - பிரதமரை குறித்து பேச தகுதியில்லை - அண்ணாமலை

இந்தி மொழியை திணிப்பு

இந்நிலையில்,இன்று விருதுநகரில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார் கனிமொழி. அப்போது அவர் பேசுகையில், நாட்டுப்பற்று என இந்தி மொழியை திணித்த பிரதமர் மோடிக்கு திடீரென தமிழ் மொழி மீது பற்று வந்துவிட்டது.

இந்தி மொழியை திணித்த பிரதமருக்கு திடீரென தமிழ் மீது பற்று - கனிமொழி காட்டம்! | Kanimozhi Speech In Virudhunagar

தேர்தலுக்குப் பின் ஓய்வில் இருக்கப்போகும் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் கற்பிக்க நல்ல ஆசிரியரை நியமிப்போம். தமிழ் படித்தாவது தமிழ்நாட்டின் உணர்வை பிரதமர் மோடியால் புரிந்து கொள்ள முடிகிறதா என பார்ப்போம் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் பாஜக தலைவர் அண்ணாமலையையும் கடுமையாக விமர்சித்தார், கர்நாடகத்தில் பணியில் இருந்தபோது தன்னை கன்னடர் என பெருமையுடன் கூறியவர் அண்ணாமலை. கன்னடர் என்று பெருமையாகக் கூறிய அண்ணாமலை பெங்களூருவில் போட்டியிடாமல் கோவையில் போட்டியிடுவது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.