திருவள்ளுவருக்கு காவி உடை; சங்பரிவார் சேவகரான எடப்பாடி பழனிசாமி - கனிமொழி விமர்சனம்
தாய்மொழி தின வாழ்த்து செய்தியில் காவி உடையில் திருவள்ளுவர் படத்தை பதிவிட்ட எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவருக்கு காவி உடை
பிப்ரவரி 21 ஆம் தேதி சர்வதேச தாய்மொழி தினத்தையொட்டி, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி பதிவில் இருந்த புகைப்படத்தில் திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணியப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி அந்த புகைப்படத்தை எக்ஸ் பக்கத்தில் இருந்து நீக்கினார்.
திருவள்ளுவருக்கு காவி நிற உடை அணியுடன் வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கனிமொழி கண்டனம்

இது தொடர்பாக திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், "பாஜக மீதான விசுவாசம் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது.
பாஜக மீதான விசுவாசம் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களை முழு சங்பரிவார் சேவகராகவே மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார். https://t.co/aSxJebgowN pic.twitter.com/bJPTdopy82
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) February 21, 2026
இப்போது அவர்களைப் போலவே திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசவும் தொடங்கிவிட்டார்" என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விசிக தலைவர் திருமாவளவன், "சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் ஆர்.எஸ்.எஸ் தான் நாட்டை ஆளும். எம்ஜிஆர், ஜெயலலிதா தலைமையிலான திராவிட இயக்கம் சங்பரிவார் கையில் சிக்கியுள்ளது.
திருவள்ளூருக்கு காவி உடை அணிந்து எடப்பாடி பழனிசாமி பதிவிடும் நிலை வந்துவிட்டது. அதிமுக தலைவர்கள் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.