எதிர்ப்பவர்கள் சூடுபட்டுதான் திருந்துவார்கள் - சீமானுக்கு கனிமொழி பதிலடி
பெரியார் குறித்த சீமானின் விமர்சனத்திற்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளார் சீமான், பெரியார் குறித்து பேசிய கருத்துக்கள் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிராக பெரியார் சொன்னதாக சீமான் கூறிய கருத்துக்கு ஆதாரம் கேட்டு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சீமானின் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.
கனிமொழி
பெரியார் குறித்த சீமானின் பேச்சுக்கு அவர் மீது மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகன், சேகர் பாபு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியயோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சீமானின் கருத்துக்கு திமுகவின் துணைப் பொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், பகுத்தறிவு, சமத்துவம், பெண் விடுதலை, அறிவியல் வளர்ச்சி, தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர்.
பகுத்தறிவு - சமத்துவம் - பெண் விடுதலை - அறிவியல் வளர்ச்சி - தமிழ்நாட்டின் முன்னேற்றம் எனும் முற்போக்கு சிந்தனைகளை முன்வைக்கும் அனைவருக்கும் தந்தை பெரியாரே தலைவர். அதற்கெதிரான கருத்தியல் கொண்டவர்கள் அவரை எதிர்த்து எதிர்த்து ஓய்ந்து போகட்டும். சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான்… pic.twitter.com/pN1P5wM3mG
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 9, 2025
அதற்கெதிரான கருத்தியல் கொண்டவர்கள் அவரை எதிர்த்து எதிர்த்து ஓய்ந்து போகட்டும். சூரியனை எதிர்ப்பவர்கள் சூடுபட்டுத்தான் திருந்துவார்கள்" என தெரிவித்துள்ளார்.