கவனம் ஈர்த்த திமுகவின் தேர்தல் அறிக்கை; 40 மட்டுமல்ல.. நாடும் நமதே - பின்னணியில் கனிமொழி எம்.பி
திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடயே பெரும் கவனம் ஈர்த்துள்ளது.
தேர்தல் அறிக்கை
திமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை அறிவாலயத்தில் வெளியிட்டார். முன்னதாக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குறித்து தேர்தல் அறிக்கை குழு தலைவர் கனிமொழி எடுத்துரைத்தார்.
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியீட்டுக்கு முன் பேசிய கனிமொழி எம்.பி, இன்று அண்ணன் தளபதி நாடாளுமன்ற தேர்தலுக்காக பாரம்பரியம் இருக்க கூடிய தேர்தல் அறிக்கையை உருவாக்க கூடிய பொறுப்பை, அந்த குழுவின் தலைமையை என்னிடம் ஒப்படைத்ததற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
திமுகவின் தேர்தல் அறிக்கை மிக முக்கியமான அங்கம். தேர்தல் அறிக்கை என்பது மக்களுக்கானதாக இருக்க வேண்டும் என்பதே திமுகவின் குறிக்கோள். திமுக செய்த சாதனைகளை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் போது பட்டியலிட்டோம், அது பிரமிப்பாக இருந்தது. தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
பின்னணியில் கனிமொழி
இந்த தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் போது தான் நம்முடைய முதலமைச்சரின் ஆட்சி, இந்த குறுகிய காலத்திற்குள் எத்தனை சாதனைகளை செய்துள்ளது என்பதை பார்க்கும் போது பிரம்மிப்பாக இருந்தது. தேர்தல் அறிக்கையில் நம்முடைய சாதனைகளை போட்டால் அதற்கே சரியாகிவிடும் என்பதால் பல சாதனைகளை குறைக்க வேண்டியிருந்த அவசியத்தையும் நாங்கள் பார்த்தோம்.
திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் முதல்வர் கொண்டு போவதற்கு வரவிருக்கும் தேர்தல் மிக முக்கியம். நிச்சயமாக வரவிருக்கும் தேர்தலில் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 40 மட்டுமில்லை; நாடும் நமதே!. என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், 64 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளோம்.
மு.க.ஸ்டாலின் பாராட்டு
தங்கை கனிமொழி தலைமையிலான குழு மிகச் சிறப்பாக தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. தேர்தல் அறிக்கையை தயாரித்த கனிமொழிக்கும், குழுவினருக்கு தலைமைக் கழகம் சார்பில் நன்றி எனத் தெரிவித்தார். பின் வெளியான தேர்தல் அறிக்கை மக்களிடையே பெரும் கவனம் ஈர்த்தது.
இதன் பின்னணியில் கனிமொழி எம்.பி முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது. கடந்த லோக்சபா தேர்தலைப் போல இந்த லோக்சபா தேர்தலிலும் தூத்துக்குடி தொகுதியில் வேட்பாளராக களம் காணும் கனிமொழி எம்.பி மக்கள் ஆதரவுடன் வெற்றிவாகை சூடுவேன் என்று உறுதியளித்துள்ளார்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்;
- உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்கப்படும்.
- புதுச்சேரிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.
- திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.
- புதிய கல்விக் கொள்கை ரத்து செய்யப்படும்.
- குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும்.
- இந்திய அளவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
- ஜி.எஸ்.டி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்.
- மாநிலங்கள் சுயாட்சி பெரும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படும் .
- ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்ட பிரிவு நீக்கப்படும்.
- திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும் மத்திய அரசு அலுவலங்களில் தமிழ் பயன்படுத்தப்படும்.
- இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
- காலை உணவு திட்டம் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
- விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும்.
- நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்..
- நீட் தேர்வு ரத்து செய்யப்படும் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூபாய் 10,00,000 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும்.
- மாணவர்களுக்கு வட்டி இல்லா கல்விக் கடன் 4 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும்.
- 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக மாற்றப்படும்.
- தமிழ்நாட்டில் புதிதாக IIT, IIM அமைக்கப்படும் பெட்ரோல் விலை 75 ரூபாயும், டீசல் 65 ரூபாயும், சிலிண்டர் விலை 500 ரூபாயும் குறைக்கப்படும்.
- வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.
- நாடு முழுவதும் மாணவர்களின் கடன் ரத்து செய்யப்படும்.