ராம ராஜ்ஜியமில்லை - நாடு முழுவதும் ஈ.வே.ராமசாமி ராஜ்ஜியத்தை உருவாக்குவோம் - எம்.பி கனிமொழி உறுதி..!

Periyar E. V. Ramasamy Smt M. K. Kanimozhi Tamil nadu DMK
By Karthick Feb 06, 2024 06:29 PM GMT
Report

இந்தியா முழுவதும் ஈ.வே.ராமசாமி ராஜ்ஜியத்தை உருவாக்கிக் காட்டுவோம் என திமுக எம்.பி கனிமொழி உறுதிபட தெரிவித்துள்ளார்.

கனிமொழி உரை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த உடன்குடியில் திமுக தெற்கு மாவட்ட சார்பில் ‘I.N.D.I.A கூட்டணி வெல்வது நிச்சயம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எம்பி கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

we-will-make-ramasamy-rajiyam-says-kanimozhi

பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் இல்லையென்றால் இந்தியா என்ற நிலைமையே இல்லாமல் போய்விடும் என தெரிவித்தார்.

திருவள்ளுவர்‌,திருக்குறளைப்‌ பற்றிய அடிப்படை புரிதல்‌ ஆளுநருக்கு இல்லை - எம்.பி. கனிமொழி!

திருவள்ளுவர்‌,திருக்குறளைப்‌ பற்றிய அடிப்படை புரிதல்‌ ஆளுநருக்கு இல்லை - எம்.பி. கனிமொழி!

இந்த நாட்டில் யாருமே பாஜகவினரை எதிர்த்து பேச முடியாத நிலை உள்ளது என சுட்டிக்காட்டிய கனிமொழி, யாரிடமும் கலந்து ஆலோசிக்காமலேயே விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை பாஜகவினர் இயற்றுகின்றனர் என்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் scholarship முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டினார்.

ராமசாமி ராஜ்ஜியம்

இவர்களின் ஆட்சி மீண்டும் வந்தால், ஒடுக்கப்பட்டவர்கள் மேலும் ஒடுக்கப்படுவார்கள் என அடித்து கூறிய கனிமொழி, பாஜக உருவாக்க நினைக்கும் ராம ராஜ்ஜியம் என்பது யாருக்கும் எந்த உரிமையும் அற்ற ஒரு ராம ராஜ்ஜியமாக மோடி மோடி ராஜ்ஜியமாக ஆர்எஸ்எஸ் ராஜ்ஜியமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

we-will-make-ramasamy-rajiyam-says-kanimozhi

ஆனால், தமிழ்நாட்டில் இருக்கும் நமது கனவு - ராமசாமி ராஜ்ஜியம் ஈ.வே.ராமசாமி ராஜ்ஜியம் என்று கூறி,. அந்த ராஜ்யத்தை நாடு முழுவதும் உருவாக்கிக் காட்டுவோம் என்றும் அதுவே I.N.D.I.A கூட்டணியின் வெற்றி என்று உறுதிபட தெரிவித்துள்ளார் கனிமொழி.