எம்.பி கனிமொழி பிறந்தநாள் - முடிவால் ஆதரவாளர்கள் அதிர்ச்சி!
நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
கனிமொழி பிறந்தநாள்
திமுக பொதுச்செயளாலாளரும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி தனது 56 வது பிறந்தநாளை வரும் வெள்ளிகிழமை கொண்டாடவுள்ளார். அதனை முன்னிட்டு தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிள்ளார்.
அதில், கடந்த மாதம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்ப்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் மழையினால் பாதிப்புப்புகுள்ளாகின. சென்னையில் வெள்ளம் வடிவதற்க்குள் தென் மாவட்டங்களில் வரலாறு காணாத அளவில் பெய்த மழையினால் மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகி உள்ளனர்.
நிவாரண பணிகள்
தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதழின்படி பல்வேறு நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தனது நண்பர்கள் மற்றும் கழகத்தினர் நேரில் சந்திப்பதையும் பூங்கொத்து அனுப்புவதையும் தவிர்த்து உதவி தேவைப்படுவர்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) January 2, 2024