10 ஆயிரம் நிவாரணமா..? வழங்கலாமே ஆனா அதுக்கு மத்திய அரசு...! கனிமொழி கருத்து..!
மத்திய அரசு தமிழக அரசு கோரிய நிவாரண தொகையை வழங்கினால் அண்ணாமலை கூறியதை 10 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கலாம் என்று கனிமொழி கூறியுள்ளார்.
கனிமொழி பேட்டி
சென்னை மயிலாப்பூரில் இன்று வெள்ள நிவாரண பொருட்களை அளித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களின் வளர்ச்சிக்கு எதிரான ஒரு கட்சி திமுக என அண்ணாமலை விமர்சித்ததற்கு பதிலளித்த கனிமொழி,
தற்போது இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் இன்றி, தொழில் வளர்ச்சி இன்றி, மக்களின் வாழ்வாதாரமே இல்லாம ஒருதற்குள் மற்றொருவர் மத - ஜாதி பிரச்சனைகளில் ஈடுபடும் அளவிற்கும் தூண்டிவிட்டுள்ளனர் அவர்கள் என்று விமர்சித்த கனிமொழி, அதனால் மக்களுக்கும் இந்த நாட்டிற்கும் யார் எதிரானவர்கள் என்பது உங்களுக்கே புரியும் என்று கூறினார்.
10000 கூட கொடுக்கலாம்
அதே நேரத்தில், மக்களுக்கு உதவ வேண்டும் என்ற காரணத்தினால் தான் இந்த நிவாரண தொகை வழங்கப்படுகிறது என்ற கனிமொழி, இத்தகு தேர்தலுக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.
மேலும், மத்திய அரசு மாநில அரசிற்கு வழங்க வேண்டிய நிவாரண தொகையை வழங்கினால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதை போல 10000 ரூபாய் வழங்கலாம் என்று கூறி, முதலமைச்சர் கோரியுள்ள பேரிடர் நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு உடனடியாக தரவேண்டும் என வலியுறுத்தினார்.