ரூ.6,000 நிவாரணம் துவங்கி வைத்த முதல்வர் முக ஸ்டாலின்.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்.!
வெள்ள பாதிப்பினால் அவதிப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு ரூ.6000 நிவாரணத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மிக்ஜாங் புயல்
தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களை பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியது மிக்ஜாங் புயல் மற்றும் மழை. தொடர்ந்து இரண்டு நாட்கள் இடைவிடாது பெய்த கனமழையின் காரணமாக 4 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரும்பான்மையாக பாதித்தது.
அதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க அரசு தீவிர மீட்புப்பணிகளை மேற்கொண்டு அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தது என்றே கூறலாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நிர்ணயித்து அதற்கான அரசாணையும் வெளியிட்டது.
முதல்வர் துவங்கினார்
4 மாவட்டங்களில் கணிசமான பாதிப்புகளை சந்தித்த பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட அதற்கான டோக்கன் வழங்கும் பணிகளும் தற்போது ரேஷன் கடைகளில் மும்முரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வேளச்சேரி அஷ்டலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடையில் மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000 நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.