மாநில அரசியலுக்கு திரும்புவது எப்போது? கனிமொழி அளித்த பதில்

M K Stalin M Karunanidhi Smt M. K. Kanimozhi Tamil nadu DMK
By Karthikraja Aug 28, 2024 06:00 PM GMT
Report

மாநில அரசியலுக்கு திரும்புவது குறித்த கேள்விக்கு கனிமொழி எம்.பி பதிலளித்தார்.

கனிமொழி

சென்னை மயிலாப்பூரில், 'மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடல்' என்ற நிகழ்ச்சியை தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்பி கனிமொழி கலந்து கொண்டார். 

kanimozhi mp latest photo

இந்த நிகழ்ச்சியில், கனிமொழியிடம், அரசியல் நுழைவு, வாரிசு அரசியல், திராவிட மடல், இந்தித் திணிப்பு, சாதி மறுப்பு திருமணம், ஆணவக் கொலை, சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மாணவர்கள் எழுப்பினார்கள். 

பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த திட்டத்தை கொண்டு வர தைரியம் உள்ளதா? கனிமொழி கேள்வி

பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த திட்டத்தை கொண்டு வர தைரியம் உள்ளதா? கனிமொழி கேள்வி

கலைஞர் கைது

அரசியல் நுழைவு குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, தலைவர் கலைஞர் அவர்களின் கைது நிகழ்ச்சி அனைத்துமே புதிதாக இருந்தது. காவலர்களுடன் தான் ஒரு சாதாரண கேள்வி எழுப்பியபோதும், அதனையும் குற்றமாக எதிர்கொண்ட தருணத்தை நினைவு கூர்ந்தார். அந்த அசாதாரண தருணத்திலும் கலைஞர்எளிதாகப் பயமின்றி, தெளிவாக ஒரு போராளியாக எதிர்கொண்டதையும், அதுவே தனது அரசியல் நுழைவு என்றும் தெரிவித்தார். 

kanimozhi mp latest photo

குடும்ப அரசியல் குறித்த கேள்விக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினின் நீண்ட அரசியல், அவசரக் காலச் சிறைவாசம், பல்வேறு பதவிகளில் மக்கள் சேவையில் அனுபவம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டுப் பதிலளித்தார்.

மாநில அரசியல்

சட்டங்களை விடவும், சமூக ரீதியாக நாம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். பொதுவாழ்வில் பங்கேற்கும் பெண்கள், இத்தகைய கீழ்த்தரமான விமர்சனங்களைப் புறந்தள்ளி விட்டு தங்களின் செயல்கள் மூலமாகப் பதிலளிக்க வேண்டும் என பேசினார். 

கடைசியாக உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதலமைச்சர் பதவி மற்றும் மாநில அரசியலுக்குத் திரும்புவது குறித்த கேள்விக்கு, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சரவை தான் முடிவு செய்யும் என்று பதிலளித்தார்.