திமுக உட்கட்சி மோதல், பஞ்சாயத்து நடத்திய கனிமொழி - இரவு வரை அட்வைஸ்!
கன்னியாகுமரியில் அமைச்சர் மற்றும் மேயர் இடையேயான பிரச்சனையை கனிமொழி பஞ்சாயத்து நடத்தி அட்வைஸ் வழங்கியுள்ளார்.
மோதல்
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும், நாகர்கோவில் மாநகராட்சி மேயராகவும் உள்ளார் மகேஷ். இவருக்கும் குமரி மேற்கு மாவட்டச் செயலாளரான அமைச்சர் மனோ தங்கராஜுக்கும் இடையே மோதல் நீடித்து வந்தள்ளது.
இந்த பிரச்னை காரணமாக திமுக மேலிடத்தில் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதனால் திற்பொழுது தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் தூத்துக்குடி எம்.பி-யுமான கனிமொழி நேற்று மதியம் திடீரென நாகர்கோவிலுக்கு வந்தார்.
அந்த சமயத்தில் அமைச்சரும் மேயரும் சென்னையில் இருந்தனர். அவர்களை உடனடியாக மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து பிரச்னை குறித்து விசாரணை நடத்தினர்.
பஞ்சாயத்து
இதனை தொடர்ந்து, மாலை 4 மணி முதல் தனி அறையில் கனிமொழி, நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்தார். நிர்வாகிகளிடம் தனி தனியே பிரச்சனைகளை குறித்து கேள்வி எழுப்பி பேசியுள்ளார்.
அங்கு அறையில் மற்ற யாரும் இல்லாததால் நிர்வாகிகள் அனைவரும் வெளிப்படையாக பேசினர். அதில், மேயர் மகேஷ் பா.ஜ.க-வினருக்கு ஆதரவாக செயல்படுகிறார், திடீரென டென்சன் ஆகிறார் என சில நிர்வாகிகள் கூறி உள்ளனர்.
அதே சமயம் மகேஷை மேயராக வர விடாமல் சதி செய்தவர்கள்தான் பிரச்னைக்கு காரணம் எனவும், அமைச்சர் மனோ தங்கராஜ் தரப்பு கிழக்கு மாவட்டத்தில் தலையிடுவதும்தான் பிரச்னைக்கு காராணம் என்றும் கூறியுள்ளனர்.
மேயர் பக்கம் அதிக தவறுகள் இருந்ததால், இனி அந்த மாதிரி நடக்காமல் நான் சொல்கிறேன் என்று கூறினார். இதில் மாநில நிர்வாகிகள் 8 பேர், மாவட்ட நிர்வாகிகள் 15 பேர், ஒன்றிய நிர்வாகிகள் 11 பேர், பகுதி நிர்வாகிகள் 4 பேர், மாநகராட்சி கவுன்சிலர்கள் 23 என மொத்தம் 61 நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.
அது மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நிகழ்ந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.