கனிமொழி எம்.பி.யின் கணவர் மருத்துவமனையில் அனுமதி : பதட்டத்தில் குடும்பத்தினர்

Smt M. K. Kanimozhi DMK
By Irumporai Mar 12, 2023 02:13 AM GMT
Report

கனிமொழி எம்பி 

தூத்துக்குடி தொகுதியின் தி.மு.க. எம்.பி.யாக இருப்பவர் கனிமொழி. இவருடைய கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு நுரையீரலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கனிமொழி எம்.பி.யின் கணவர் மருத்துவமனையில் அனுமதி : பதட்டத்தில் குடும்பத்தினர் | Kanimozhi Mps Husband Admitted To Hospital

மருத்துவமனையில் கணவர்

இதையடுத்து அங்குள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை அறிந்த கனிமொழி உடனடியாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார். தற்போது அரவிந்தனின் உடல்நிலை குணமடைந்து வருவதாகவும் , இன்னும் சில நாட்களில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார் என அவரது மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.