வாழ்க்கையை தலைகீழாக்கிய மார்பக புற்றுநோய் - கதறி அழுதுருக்கேன்..! கனிகா வேதனை..!

Karthick
in பிரபலங்கள்Report this article
நடிகைகள் தங்கள் வாழ்வில் ஏற்பட்ட சோகங்களை குறித்து தற்போது பேட்டிகளில் மனந்திறந்து பேசி வருகின்றனர்.
நடிகை கனிகா
தற்போது எதிர்நீச்சல் தொடரில் நடித்து சின்னத்திரையில் பிரபலமாக இருந்து வரும் நடிகை கனிகா, சில ஆண்டுகள் முன்பு அஜித் குமாரின் "வரலாறு" படத்தில் நடித்து ரசிகர்களை பெரிதாக கவர்ந்தார்.
2002-ஆம் வெளியான five star படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தொடர்ந்து மலையாளம் - தெலுங்கு மொழி படங்களிலும் நடித்தார். தற்போது 41 வயதாகும் இவருக்கு ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவருடன் 2008-ஆம் ஆண்டு திருமணமாகி மகன் ஒருவர் உள்ளார். நடிகை கவுதமியின் பேட்டியில், தனது வாழ்வில் தான் சந்தித்த சோதனைகளை குறித்து கனிகா மனம்திறந்து பேசியுள்ளார்.
புற்றுநோய் வலி
அதில், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு குறித்து நிறைய பேசும் தன்னுடைய அம்மா அந்த விஷயத்தில் மாட்டிக்கொண்டார் என்று கூறினார். சாதரணமாக அவருக்கு ஒரு நாள் மார்பகத்தில் வலி ஏற்பட, போனில் அழைத்து விஷயத்தை கூற, உடனே மருத்துவமனை சென்றபோது பல கட்ட சோதனைகளின் முடிவாக அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது என்ற கனிகா, அது தன்னை அதிர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்று விட்டது என்றும் வாழ்க்கை சில நாட்களுக்கு அப்படியே தலைகீழாக மாறிவிட்டது என்றும் தெரிவித்தார்.
ஹீமோதெரபி, ரேடியேஷன் சிகிச்சை உள்ளிட்ட பல வேதனைகளை தனது அம்மா சந்தித்தாக குறிப்பிட்ட கனிகா, தான் கஷ்டமான தருணங்களை சந்திக்கும் போது, காரில் பாடல்களை ஒலிக்க விட்டு அழுவேன் என்று தெரிவித்து, அதுவே தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.
ஆனால், சிகிச்சையின் போது அம்மா பட்ட வேதனைகளை பார்த்து நொந்து போனதாக வேதனையுடன் குறிப்பிட்ட அவர், அவரது மார்பகத்தை பாதுகாப்பு காரணத்திற்காக வெட்டி எடுத்த பிறகு அதனை பார்க்கும் பொழுது, மிகவும் கஷ்டமாகிவிட்டது என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.