சூப்பர் ஸ்டார் நமக்கு மூத்தவர்; அவர் படம் வருவதுதான் சரி - நடிகர் சூர்யா பேச்சு!
சூப்பர் ஸ்டார் நமக்கு மூத்தவர்; அவர் படம் வருவதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா
கோவையில் கொடிசியா அரங்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள 'மெய்யழகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி, அரவிந்த் சுவாமி, நடிகை ஸ்ரீ திவ்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தையும் நடிகர் சூர்யா வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா ,'' இந்தப் படத்தை நான் பார்த்தேன். படத்தில் நடித்த அனைவரும் அருமையாக நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் என்பதில் அனைவருக்கும் நன்றி சொல்லி வருகிறேன். ஜெய்பீம் இயக்குநர் மூலம் தான் படம் என்னிடம் வந்ததாகத் தெரிவித்தார்.
கங்குவா ரீலீஸ் எப்போது?
மேலும் பருத்தி வீரன் படத்திற்குப் பிறகு கார்த்தியை கட்டிப் பிடித்த படம் இது கூறிய அவர் ,''என் மகன் ஜோதிகா பெயரைத் தான், பெயருக்குப் பின்னால் எழுதுவான். அது போல இசையமைப்பாளர் கோவிந்த் தன்னுடைய அம்மா பெயரைப் பின்னால் வைத்துள்ளது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.அப்போது அரங்கில் இருந்த ரசிகர்கள் கங்குவா ரீலீஸ் எப்போது?
என்று கேள்வி எழுப்பினர். அதற்கு நடிகர் சூர்யா அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் படம் வருகிறது. ரஜினி மூத்தவர், சினிமாவின் அடையாளம். அந்த நாளில் அவர் படம் வருவது தான் சரி. கங்குவா ஒரு குழந்தை. அதை நீங்கள் பார்த்துக் கொள்வீர்கள். கங்குவா படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் நியாயம் கோருவது நியாயமற்றது! முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு IBC Tamil