ஏன் 'சூப்பர் ஸ்டார்' பட்டத்தை பிடித்து தொங்குகிறீர்கள் - விஜய்யை விளாசிய பிரபல நடிகர்!

Rajinikanth Vijay Tamil Cinema Jailer Tamil Actors
By Jiyath Aug 10, 2023 05:17 PM GMT
Report

நடிகர் மீசை ராஜேந்திரன் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசியுள்ளார்.

மீசை ராஜேந்திரன்

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும்,வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் மீசை ராஜேந்திரன். இந்நிலையில் அண்மையில் இவர் யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார்.

ஏன்

அப்போது அவரிடம் 'சமூக வலைத்தளத்தில் இப்போது சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்விதான் பேச்சாக இருக்கிறது. அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், என்ற கேள்வி கேட்கப்பட்டது.

பேட்டி

அதற்கு பதிலளித்த மீசை ராஜேந்திரன் 'சூப்பர் ஸ்டார் அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் ரஜினி சார் தான். வானத்தில் ஒரு சூரியன், ஒரு நிலவு என்பதை போல ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

ஏன்

நான் விஜய் சாரை பார்த்து கேட்கிறேன் 'இளைய தளபதி என்று தானே பட்டம் வைத்திருந்தீர்கள், பின்னர் சில நாள் கழித்து ஏன் தளபதி என்று வைத்தீர்கள். தளபதி என்று மு.க.ஸ்டாலின் என்ற ஒருத்தர் ஏற்கனவே அரசியல் இருக்கிறார் தானே. நீங்கள் ஏன் அடுத்தவர்கள் பட்டத்திற்கு ஆசை படுகிறீர்கள். சூப்பர் ஸ்டார் என்று ஒருத்தர் இருக்கும்போது எதற்கு நீங்கள் அதற்கு ஆசைப் படுகிறீர்கள் .

எதற்கு அந்த பட்டத்தை பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்று பேசினார். மேலும் பேசிய அவர் 'எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும், அது சினிமாவாக இருக்கட்டும், தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும், மேடையில் பேசுகிற பேச்சாக இருந்தாலும், ஒரு குட்டிக் கதை சொல்வதாக இருந்தாலும் ரஜினிகாந்தை தான் விஜய் பின்பற்றுகிறார். சம்பளம் அதிகமாக வாங்கினால் நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவீர்களா? என்று பேசியுள்ளார்.