MP'யாகி 2 நாள் தான் ஆகுது...அதுக்குள்ள CISF அதிகாரியிடம் "பளார்" வாங்கிய கங்கனா!! வைரல் வீடியோ உள்ளே

BJP Kangana Ranaut Lok Sabha Election 2024
By Karthick Jun 06, 2024 12:15 PM GMT
Report

கங்கனா ரணாவத்

தமிழில் ஜெயம் ரவியின் "தாம் தூம்" படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், அரசியலிலும் ஈடுபாடு காட்டுகிறார்.

kangana ranaut

மேலும், தமிழில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட "தலைவி" மற்றும் சந்திரமுகி 2 படத்திலும் கங்கனா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்து ராஷ்டிரம்" 1947'இல் ஏன் அறிவிக்கவில்லை? 2014-இல் தான் சனாதன சுதந்திரம் - கங்கனா

"இந்து ராஷ்டிரம்" 1947'இல் ஏன் அறிவிக்கவில்லை? 2014-இல் தான் சனாதன சுதந்திரம் - கங்கனா

பளார்

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக மந்தி தொகுதியில் களமிறங்கிய கங்கனா 537022 வாக்குகளை பெற்று 74755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

kangana slapped by cisf jawan in airport bjp

முதல் முறை எம்.பி'யான அவருக்கு இன்று சண்டிகர் விமான நிலையத்தில் CISF ஜவான் ஒருவரால் அறைப்பட்டார் என்ற செய்தி பெரும் வைரலாகியுள்ளது.

விவசாயிகளுக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் அவர் பேசியதாக கூறப்படுகிறது.CISF ஜவான் பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவைச் சேர்ந்த பெண் அதிகாரி என அடையாளம் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.