இனி அந்த மாதிரி படங்கள்ள மட்டும்தான்... கங்கனா ஷாக் தகவல்!
அரசியலில் களமிறங்குவது குறித்து நடிகை கங்கனா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கங்கனா ரனாவத்
நடிகை கங்கனா ரனாவத் சினிமா மட்டுமின்றி அரசியல் குறித்தும் தனது விமர்சனங்களை முன்வைப்பவர். அடிக்கடி சர்சைகளில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டவர். அதுவே அதிகம் கவனம் ஈர்த்தது எனவும் கூறலாம்.

தற்போது தலைவி, எமர்ஜென்சி போன்று அரசியல் தலைவர்களின் கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் ரனாவத் அரசியலில் களமிறங்குவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். மேலும், மத்திய அரசு தொடர்பான பிரச்னைகள், அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து அதிகம் பேசி வருவார்.
அரசியலில்..
இந்நிலையில், அரசியலுக்கு வருவது குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், ``நாட்டுக்கு சேவை செய்பவர்களுக்கு தொடர்ந்து நான் ஆதரவளிப்பேன்.

எல்லா வகையிலும் அவர்களுக்கு துணை நிற்பேன். “அரசியலில் இணைந்து தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இப்போதைக்கு இல்லை”. ஆனால் ஒரு நடிகையாக எனக்கு இந்திய அரசியலில் ஆர்வம் உண்டு.
இனி வரும் காலங்களில் அரசியலை மையமாக வைத்து திரைப்படம் எடுப்பேன் என்று கூறியுள்ளார்.
சிறுமிகள் மீது அத்துமீறல் : இலங்கையில் பிறந்த பௌத்த பிக்குவிற்கு அவுஸ்ரேலியாவில் 13 வருட சிறை IBC Tamil
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil