சிறந்த நடிகைக்கான விருதால் அதிர்ச்சி.. வாங்க மறுத்த கங்கனா - கடுப்பான பிலிம்ஃபேர்!

Bollywood Instagram Kangana Ranaut
By Sumathi Aug 22, 2022 12:53 PM GMT
Report

சிறந்த நடிகைக்கான விருதை பரிந்துரைத்த பிலிம்பேர் விருதுக்கு எதிராக வழக்கு தொடருவேன் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

 கங்கனா

தேசிய விருது பெற்ற நடிகையான கங்கனா, சமீபத்தில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான `தலைவி' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த 2021- ல் வெளியானது.

சிறந்த நடிகைக்கான விருதால் அதிர்ச்சி.. வாங்க மறுத்த கங்கனா - கடுப்பான பிலிம்ஃபேர்! | Filmfare Cancels Kangana Ranauts Nomination

இத்திரைப்படத்தில் நடித்ததற்காக கங்கனா ரனாவத் வரப்போகும் 67-வது பிலிம்பேர் விழாவில் சிறந்த நடிகைக்கான பரிந்துரைப் பட்டியலில் தேர்வாகியிருந்தார். இந்த அறிவிப்பு பிலிம்பேர் தரப்பில் இருந்து அவருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிம்பேர் விருது

இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்தது, “கடந்த 2014 முதல் நெறிமுறையற்ற, ஊழல் மற்றும் நியாயமற்ற நடைமுறைகளை பின்பற்றி செயல்பட்டு வரும் பிலிம்பேர் விருதுகள் போன்றவற்றை நான் தவிர்த்து வருகிறேன்.

சிறந்த நடிகைக்கான விருதால் அதிர்ச்சி.. வாங்க மறுத்த கங்கனா - கடுப்பான பிலிம்ஃபேர்! | Filmfare Cancels Kangana Ranauts Nomination

இருப்பினும் பிலிம்பேரில் இருந்து தொடர்ந்து அழைப்பு வந்த வண்ணமே உள்ளது. இந்த முறை தலைவி படத்திற்கு தன்னை தேர்ந்தெடுத்திருப்பதாகக் கூறி அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் இன்னும் என்னை பரிந்துரைத்து வருவதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.

சிறந்த நடிகை

அதில் நான் பங்கேற்பது எனது தொழில் தர்மத்திற்கு எதிரானது என்றும் தெரிவித்திருந்தார். கங்கானாவின் இந்த குற்றச்சாட்டை எதிர்த்து தற்போது சிறந்த நடிகைக்கான பரிந்துரையில் இருந்து கங்கனாவின் பெயரை நீக்கியுள்ளது பிலிம்பேர்.

சிறந்த நடிகைக்கான விருதால் அதிர்ச்சி.. வாங்க மறுத்த கங்கனா - கடுப்பான பிலிம்ஃபேர்! | Filmfare Cancels Kangana Ranauts Nomination

இதுவரைக்கும் ஐந்து முறை அவர் பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளார். அதில் 2 முறை அவர் நேரில் வராத போதும் கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான பரிந்துரை பட்டியலில் இருந்து அவரது பெயரைப் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம்.

 முற்றுப்புள்ளி வைப்பேன்

எங்கள் மீது குற்றச்சாட்டு வைத்த கங்கனா ரனாவத் மீது சட்ட நடவடிக்கை எடுக்க எங்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது”, என பிலிம்பேர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுள்ளது. பிலிம்பேரின் பதிலுக்கு விளக்கமளித்த கங்கனா,

``பிலிம்பேர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இருந்து எனது பெயர் திரும்பப் பெறப்பட்டுள்ளது. ஊழல் நிறைந்த இந்த சிஸ்டத்திற்கு எதிரான எனது நிலைப்பாட்டில் எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இருப்பினும் பிலிம்பேருக்கு எதிராக வழக்கு தொடர்ந்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.