தனுஷூக்கு நோ சொல்லவே மாட்டேன் - பிரபல பாலிவுட் நடிகை ஆதங்கம்!
தனுஷ் படத்தில் நடிக்க கங்கனா ரனாவத் மறுத்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது.
கங்கனா ரனாவத்
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா ரனாவத். இந்தி தவிர மற்ற மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றுள்ளார்.
சமூகவலைத்தளங்களில் தன்னுடைய கருத்துக்களை துணிச்சலுடன் வெளிப்படுத்துவதில் சிறிதும் தயங்காதவர். டி50 படத்தில் நடிக்க கேட்டதற்கு கங்கனா ரனாவத் நோ சொல்லிவிட்டார் என்று கூறப்பட்டது.
தனுஷ் இஸ் மை fab
இந்நிலையில், இதுகுறித்து பேசிய கங்கனா, இது பொய்யான செய்தி. அது போன்று எந்த பட வாய்ப்பும் என்னை தேடி வரவில்லை. தனுஷ் இஸ் மை fab. அவருக்கு என்னால் நோ சொல்லவே முடியாது என தெரிவித்துள்ளார்.
தனுஷின் டி50 படத்தில் விஷ்ணு விஷாலும், எஸ்.ஜே. சூர்யாவும் அவரின் சகோதரர்களாக நடிக்கிறார்கள். அந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.