முதல் பிரதமர் நேதாஜி.. சர்ச்சையான பேச்சு - ஆதாரத்தை வெளியிட்ட நடிகை கங்கனா!

BJP India Indian Actress Kangana Ranaut Lok Sabha Election 2024
By Jiyath Apr 06, 2024 06:36 AM GMT
Report

முதல் பிரதமர் குறித்த சர்சைக்கு ஆதாரமாக ஒரு பிரபல ஊடகத்தின் செய்தி குறிப்பை நடிகை கங்கனா பகிர்ந்துள்ளார்.

நடிகை கங்கனா 

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

முதல் பிரதமர் நேதாஜி.. சர்ச்சையான பேச்சு - ஆதாரத்தை வெளியிட்ட நடிகை கங்கனா! | Kangana Explained About Subhas Chandra Bose Issue

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்தியா முழுவதும் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இந்த தேர்தலில் இமாச்சலப்பிரதேசம் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரணாவத் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இதற்காக தீவிர பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே பிரபல ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர் இந்தியாவின் முதல் பிரதமர் குறித்து பேசியது பேப்பரும் சர்ச்சையானது. அவர் கூறியதாவது "எனக்கு ஒரு விஷயம் தெளிவுபடுத்துங்கள். நமக்கு சுதந்திரம் கிடைத்தபோது நமது முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

கோர விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்; தலைகுப்புற கவிழ்ந்த கார் - வெளியான அதிர்ச்சி Video!

கோர விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்; தலைகுப்புற கவிழ்ந்த கார் - வெளியான அதிர்ச்சி Video!

வெளியிட்ட ஆதாரம் 

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பொறுப்பேற்றிருந்தார். ஆனால், சுபாஷ் சந்திரபோஸ் என கங்கனா கூறியிருந்தது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் இந்த சர்சைக்கு ஆதாரமாக ஒரு பிரபல ஊடகத்தின் செய்தி குறிப்பை நடிகை கங்கனா பகிர்ந்துள்ளார்.

முதல் பிரதமர் நேதாஜி.. சர்ச்சையான பேச்சு - ஆதாரத்தை வெளியிட்ட நடிகை கங்கனா! | Kangana Explained About Subhas Chandra Bose Issue

அதில் "நேதாஜி என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர், அக்டோபர் 21, 1943 அன்று சிங்கப்பூரில் ஆசாத் ஹிந்த் (சுதந்திர இந்தியா) என்ற அரசை உருவாக்கினார். இரண்டாம் உலகப் போரின் போது சுபாஷ் சந்திர போஸ் தன்னைப் பிரதமர், மாநிலத் தலைவர் மற்றும் போர் அமைச்சராக அறிவித்தார். மகளிர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்தவர் கேப்டன் டாக்டர் லட்சுமி சுவாமிநாதன்.

இந்திய தேசிய ராணுவத்திற்காக போராடும் பெண் வீரர்களின் படையான ராணி ஜான்சி படைப்பிரிவுக்கும் அவர் தலைமை தாங்கினார். ராணி ஜான்சி படைப்பிரிவு ஆசியாவிலேயே முதல் பெண்கள் மட்டும் போர் படைப்பிரிவு ஆகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.