காங்கிரஸ் தேர்தல் அறிக்கை; மாநிலங்கள் விருப்பப்பட்டால் நீட் தேர்வு - முக்கிய அம்சங்கள்!

Indian National Congress Delhi Lok Sabha Election 2024
By Swetha Apr 05, 2024 08:13 AM GMT
Report

மாநிலங்கள் விருப்பப்பட்டால் நீட் தேர்வுகள் நடத்திக்கொள்ளலாம் தொடங்கி பெண்களுக்கு ரூ.1 லட்சம் வரை காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

நடப்பாண்டின் மக்களவை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அரசியல் காட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் தீவரம் காட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை; மாநிலங்கள் விருப்பப்பட்டால் நீட் தேர்வு - முக்கிய அம்சங்கள்! | Congress Party Releases Its Manifesto

அந்த வகையில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இணைந்து தேர்தல் அறிக்கையை இன்று டெல்லியில் வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “நீதி என்பதை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் யாரெல்லாம் ஒதுக்கப்பட்டார்களோ அவர்களுக்கு நீதி வழங்கும்வகையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

work, wealth, welfare என்ற அடிப்படையில் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மக்கள் நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அனைத்து தரப்பு மக்களுக்கும் நீதி வழங்கும்.”என்றார்.

5 இளைஞர் உரிமை - இது காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி - ராகுல் காந்தியின் பட்டியல்

5 இளைஞர் உரிமை - இது காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதி - ராகுல் காந்தியின் பட்டியல்

முக்கிய அம்சங்கள்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள்:

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை; மாநிலங்கள் விருப்பப்பட்டால் நீட் தேர்வு - முக்கிய அம்சங்கள்! | Congress Party Releases Its Manifesto

  • சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்படும்.
  • NEET, CUET போன்ற தேர்வுகளை மாநில அரசுகள் விருப்பப்பட்டால் நடத்திக் கொள்ளலாம்.
  • குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு ஆண்டு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
  • பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10% இடஒதுக்கீடு அனைத்து சாதியினருக்கும் விரிவாக்கம் செய்யப்படும்.
  • பட்டியலினத்தவர்கள் மீதான துன்புறுத்தலை தடுக்க ரோகித் வெமுலா சட்டம் கொண்டுவரப்படும்.
  • தேசிய கல்வி கொள்கை மாநில அரசுகளின் ஆலோசனைகளுக்கு பிறகே நடைமுறைப்படுத்தப்படும்.
  • 2025ம் ஆண்டு முதல் மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு.
  • மகாலட்சுமி திட்டத்தின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
  • 2009ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, 12ம் வகுப்பு வரை கட்டாயக் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை.
  • இடஒதுக்கீடு உச்ச வரம்பு 50% என்பதை உயர்த்த சட்டத்திருத்தம் செய்யப்படும்.
  • ST, ST, OBC பிரிவினருக்கான காலிப்பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும்.
  • ST, ST, OBC மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை இரட்டிப்பாக்கப்படும்.ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டுவரப்படாது.
  • அரசியல் சாசனம் 8வது அட்டவணையில் ஏராளமான மொழிகள் சேர்க்கப்படும்.
  • பெண்களுக்கான ஊதியத்தில் பாகுபாடு காட்டப்படுவதை தவிர்க்க ஒரே வேலை, ஒரே ஊதியம் திட்டம் அமல்படுத்தப்படும்.     
  • பணியில் இருக்கும்போது தூய்மை பணியாளர்கள் உயிரிழந்தால் ரூ.30 லட்சம் வழங்கப்படும்.
  • மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கான பென்சன் ரூ.1000 ஆக அதிகரிப்பு