என்ன பார்க்க வேண்டுமா...அப்போ ஆதார் கார்ட் அவசியம் கொண்டு வாங்க - கங்கனா நிபந்தனை!
என்னை பார்க்க வர வேண்டுமானால் ஆதார் கார்ட் அவசியம் என எம்.பி கங்கனா கூறியுள்ளார்.
கங்கனா நிபந்தனை
இமாசலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரணாவத் 74,755 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில், என்னை சந்திக்க வரும் என் தொகுதி மக்கள் அனைவரும் ஆதார் அட்டையை கொண்டு வர வேண்டும் என வித்தியாசமான நிபந்தனையை அவர் முன்வைத்துள்ளார்.
மண்டி தொகுதியில் உள்ள பஞ்சாயத்து பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்பி கங்கனா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், " நான் மண்டி தொகுதியில் இருக்கும் நாட்களில் இந்த பஞ்சாயத்து பவனில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் வழியாக மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்க முயற்சிப்பேன்.
ஆதார் கார்ட்
நான் மண்டியில் இருக்கும் ஒவொரு நேரத்தையும் என் தொகுதி மக்களுக்காக அர்ப்பணிக்க விரும்புகிறேன். இந்த இடத்தில என் தொகுதி மக்களை தவிர வேறு யாரையும் நான் சந்திக்க விரும்பவில்லை.
ஆதலால் என தொகுதி மக்கள் ஆதார் அட்டையை கொண்டு வந்தால் தான் அவர்கள் என் தொகுதி மக்கள் என்பதை என்னால் உறுதிப்படுத்தி கொள்ள முடியும். மேலும் என்னை சந்திக்க வரும் என் தொகுதி மக்கள் அவர்களின் குறைகளை பேப்பரில் எழுதி கொண்டு வரவேண்டும். அப்போதுதான் பிரச்சனைகளை விரைவாக தீர்த்து வைக்க முடியும்" என்று தெரிவித்துள்ளார்.