காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? விவரம் இதோ..
காஞ்சிபுரம் 2 வருவாய் கோட்டங்கள், 5 வட்டங்களுடன் 633 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளது. 633 கிராம பஞ்சாயத்துகளாகவும் 5 ஊராட்சி ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம்
1977 அன்று செங்கல்பட்டு மாவட்டத்தைப் பிரித்து, காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்திலிருந்து புதிய செங்கல்பட்டு மாவட்டம் நிறுவிய பின்னர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பெரும்புதூர் என இரண்டு வருவாய் கோட்டங்களும்; 5 வருவாய் வட்டங்களையும் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் நெய்யப்படும் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், புவிசார் குறியீடு பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் காணப்படும் 163 பெருங்கற்கால இடங்களில், 70% காஞ்சிபுரம் மாவட்டத்தில் காணப்படுகிறது.
அவற்றில் எருமையூர், சிறுகளத்தூர், சிக்கராயபுரம், அய்யன்சேரி, கீழம்பாக்கம் மற்றும் நன்மங்கலம் அடங்கும்.
மாவட்ட ஆட்சியர்கள் விவரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தின் 64வது ஆட்சியராக கலைச்செல்வி மோகன் தற்போது பதவியில் உள்ளார். இதற்கு முன் ஆட்சியராக இருந்த ஆர்த்தி கல்வி இயக்க திட்டத்தின் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டு, நில அளவை துறை கூடுதல் இயக்குனராக இருந்த கலைச்செல்வி மோகன் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கலைச்செல்வி மோகன் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்றால் ஊராட்சி தலைவர்கள் அரசு திட்டங்களை தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அரசு நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் வருவதில்லை என எம்பி எம்எல்ஏ முன்னிலையில் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தவர்.
முன்னதாக ஆட்சியராக இருந்த ஆர்த்தி பல் மருத்துவம் படித்தவர், 2012ல் ஐஏஎஸ் பணியில் சேர்ந்தவர். கொரோனா காலக் கட்டத்தில் பணியில் இருந்தவர்.
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பை ஏற்படுத்த ரூ.185 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தை 100 சதவீதம் செயல்படுத்தியதற்காக சிவில் சர்வீஸஸ் தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆர்த்திக்கு விருது வழங்கி கெளரவித்தார்.
இங்கு மொத்தமாக 64 ஆட்சியர்கள் பணியாற்றியுள்ளனர். அதில் பெண் ஆட்சியர்கள் சத்தியபாமா(1961-61), டி.எம். எம்.ஷீலாப்ரியா(1991-92), ஆர்.கெஜலட்சுமி (2015-2017), மகேஸ்வரி ரவிக்குமார்(2020-2021) என பலர் பதவியில் இருந்துள்ளனர். நாட்டின் சுதந்திரத்திற்கு பின் முதல்முறை இம்மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றவர் டி.எஸ் ராமச்சந்திரன்.