அரியலூரை கையாண்ட ஆட்சியர்கள் யாரெல்லாம் தெரியுமா - விவரம் இதோ!
அரியலூர் மத்திய தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இந்த மாவட்டம் விவசாயம், குறிப்பாக நாட்டு நெல், சர்க்கரை நெல் மற்றும் வாகன உற்பத்தி போன்ற தொழில்களுக்கு பெயர்போனது.
அரியலூர்
சிமெண்ட் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. 2001 இல் பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால், மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
பின் தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007ல் உருவாக்கப்பட்டது.
பி.ரத்தினசாமி
இங்கு மாவட்ட கலெக்டராக பி.ரத்தினசாமி உள்ளார். அதற்கு முன் சென்னை வணிக வரித்துறை இணை கமிஷனராகவும் (நிர்வாகம்) ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் கலெக்டராகவும் பணியாற்றி வந்தார். 2009 ஆம் ஆண்டு TNPSC குரூப் I தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அவர் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரிடம் தனி உதவியாளராக (பொது) நியமிக்கப்பட்டார்.
பின்னர் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள NPKRR கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக இயக்குநராக பதவி உயர்வு பெற்றார் . வேலூர் மாநகராட்சி கமிஷனராகவும் பணியாற்றினார். ரத்தினசாமி அரசு, உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையின் இணைச் செயலாளராக மாற்றப்பட்டு நியமிக்கப்பட்ட ஜே ஆன்மேரி ஸ்வர்ணாவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்க மாவட்ட மாஜிஸ்திரேட்டாக செயல்படுகிறார். திட்டமிடல் மற்றும் மேம்பாடு, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொதுத் தேர்தல்கள், ஆயுத உரிமம் போன்றவற்றைக் கையாள்கிறார்.
சிவில் சப்ளைகள், நில விவகாரங்கள், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள், கிராம அதிகாரிகள் போன்றவற்றைக் கண்கானித்து வருகிறார்.
ஆட்சியர்கள் விவரம்
முன்னதாக, 2001ல் மாவட்டமாக பிரிக்கப்பட்டபோது ராகேஷ் குமார் யாதவ் ஐஏஎஸ் ஆட்சியராக நியமிக்கப்பட்டார். ஆனால் ஒரு வருடத்தில் அரியலூர் பெரம்பலூருடன் இணைக்கப்பட்டதால் மாற்றப்பட்டார். பின் 2007ல் மீண்டும் மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அப்போது, விஎம் சேவியர் கிறிஸ்ஸோ நாயகம் ஐஏஎஸ் ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து ஆர்.சுடலை கண்ணன் (09.03.2008 முதல் 23.02.2009 வரை), அனில் மேஷாரம் (24.02.2009 முதல் 18.08.2009 வரை), டி.ஆபிரகாம் (24.08.2009 முதல் 29.09.2010 வரை) என சட்டம் ஒழுங்கு காரணமாக வருடத்திற்கு ஒருவர் மாற்றப்பட்டுள்ளனர்.
முதல் பெண் ஆட்சியராக டிஎம்டி அனு ஜார்ஜ் 2011ல் நியமிக்கப்பட்டார். இவருக்குப்பின் லக்ஷ்மி பிரியா, எம்.விஜயலட்சுமி, டி.ரத்னா, பி. ரமண சரஸ்வதி மற்றும் அன்னே மேரி ஸ்வர்ணா என 6 பெண் ஆட்சியர்கள் இங்கு பணியாற்றியுள்ளனர். இந்த மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 17 ஆட்சியர்கள் பணியில் இருந்துள்ளனர்.