இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் யார் தெரியுமா? முழு விவரம் இதோ!
இராணிப்பேட்டை மாவட்டம்
இராணிப்பேட்டை மாவட்டம், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. இராணிப்பேட்டை மாவட்டத்தை, அப்போதை ஆட்சியிலிருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டின் 36ஆவது மாவட்டமாகத் தொடங்கி வைத்தார்.
இராணிப்பேட்டை மாவட்டம், இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் ஆகிய இரு கோட்டங்களையும், ஆற்காடு, வாலாஜாபேட்டை, கலவை, சோளிங்கர், அரக்கோணம், மற்றும் நெமிலி ஆகிய ஆறு வட்டங்களையும், 331 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது.288 ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.
இம்மாவட்டத்தில் அரக்கோணம், இராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, மேல்விஷாரம் ஆகிய ஐந்து நகராட்சிகளும், சோளிங்கர், காவேரிபாக்கம், திமிரி, கலவை, நெமிலி, தக்கோலம், பனப்பாக்கம், விளாப்பாக்கம், அம்மூர் ஆகிய ஒன்பது பேரூராட்சிகளும் உள்ளன.
வளர்மதி ஐ.ஏ.எஸ்
இராணிப்பேட்டை மாவட்டத்தின் ஆட்சியராக பணியாற்றி வந்த பாஸ்கர பாண்டியன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து, சென்னை சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராகச் செயல்பட்டு வந்த வளர்மதி, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து மாவட்டத்தின் ஆட்சியராக பணியாற்றி வந்த வந்த வளர்மதி சமூக நலத்துறை இணை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.பிறகு இராணிப்பேட்டை மாவட்டத்தின் 5 வது புதிய மாவட்ட ஆட்சியராக Dr. J.U.சந்திரகலா இவர் 2024 ஜூலை 19-ம் தேதி முதல் இன்றுவரை இந்த பதவியில் உள்ளார்.
Dr. J.U.சந்திரகலா ஐ.ஏ.எஸ்
புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் Dr. J.U.சந்திரகலா . இவர் கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர்.2013ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக சந்திரகலா நியமிக்கப்பட்டார். 2022 இல் ஜூனியர் நிர்வாக தரத்திற்குப் பதவி உயர்வு பெற்றார்.
இவர் முதலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உதவி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.பின்னர் திருப்பத்தூர் மற்றும் ஓசூருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும் இருந்தார். அவர் TNRTP இன் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.